கடந்த ஆண்டு ஜூன் 01-ஆம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிடப்பட்டது. இதன் மீது ஜூன் 30-ஆம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பின்னர், பல மாற்றங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய கல்விக் கொள்கை வரைவுகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை மத்திய அமைச்சரவை புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டது. அதில், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியிலியே பயிற்றுவிக்க வேண்டும், மும்மொழிக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது போன்றவை அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர், புதிய கல்வி தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாடு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையை நிராகரிக்க வேண்டுமென முதல்வருக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.
மேலும், பள்ளிகளை திறப்பது, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்தும் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
கவுகாத்தி : ஐபிஎல் 2025-ன் ஆறாவது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.…
அகமதாபாத் : ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டரும் பஞ்சாப் கிங்ஸ் நட்சத்திர வீரருமான மார்கஸ் ஸ்டோய்னிஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின்…
அகமதாபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதிய நிலையில் போட்டியில் பஞ்சாப்…
தூத்துக்குடி : சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் ஜாமின்…
சென்னை : இயக்குநர் இமயம் பாரதிராஜா என்ற பெரிய இயக்குனருக்கு மகனாக பிறந்தாலும் மனோஜ் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல…