#BREAKING: முதல்வர் பரப்புரை சாலை.. துப்பாக்கியுடன் திரிந்தவர் கைது..!

Default Image

தமிழக முதல்வர் ராணிப்பேட்டை வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் பரப்புரை சென்ற சென்னை- அரக்கோணம் சாலையில் உள்ள பேர்ணாம்பட்டு பகுதியில் துப்பாக்கி, வெடிகுண்டு உடன் இருந்தவர் கைது செய்யப்பட்டார். சந்தேகத்துக்கு இடமாக ஆயுதங்கள் பலநம்பர் ப்ளேட்களுடன் சுற்றியவரை பேர்ணாம்பட்டு காவல்த்துறை கைது செய்தனர்.

முதல்வர் பரப்புரைக்கு வந்து சென்ற சில மணி நேரத்தில் துப்பாக்கியுடன் இருந்தவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்டவரிடமிருந்து துப்பாக்கி, வாகனத்தை காவல்துறை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்