முதல்வர் பிறந்தநாள் -இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் உதயநிதி..!
முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில், இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் உதயநிதி.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மரக்கன்று நட்டி வைத்து, கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இந்த நிலையில், முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து, பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.
மோதிரம் வழங்கிய அமைச்சர் உதயநிதி
அந்த வகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சேப்பாக்கம் அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில், இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்.