இறைவன் மீது பழி சுமத்த முதலமைச்சர் முயற்சி -மு.க.ஸ்டாலின்
இறைவன் மீது பாரத்தைச் சுமத்த முயல்கிறார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக சென்னை உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு அதிகமாகி வருகிறது.இதன் விளைவாக சென்னை ,செங்கல்பட்டு,திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையேசென்னை வேளச்சேரியில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில், கொரோனா எப்போது ஒழியும் என்று கடவுளுக்குத்தான் தெரியும் என்று கூறினார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,கொரோனா வைரஸ் பரவலுக்கு பலர் மீதும் பழிபோட்டு வந்த முதலமைச்சர் பழனிசாமி . தற்போது இறைவன் மீது பாரத்தைச் சுமத்த முயல்கிறார். கொரோனா மறைவதுதான் நற்பெயர் தருமே தவிர.அதனை மறைப்பதல்ல! இனியேனும் மக்கள் பிரதிநிதிகள், மக்களின் ஆலோசனைகளைக் கேட்டு கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்க முயலுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
#CoronaVirus பரவலுக்கு பலர் மீதும் பழிபோட்டு வந்த @CMOTamilNadu தற்போது இறைவன் மீது பாரத்தைச் சுமத்த முயல்கிறார்.
கொரோனா மறைவதுதான் நற்பெயர் தருமே தவிர; அதனை மறைப்பதல்ல!
இனியேனும் மக்கள் பிரதிநிதிகள், மக்களின் ஆலோசனைகளைக் கேட்டு #COVID19 இல்லாத தமிழகத்தை உருவாக்க முயலுங்கள்! pic.twitter.com/pqPY63pR3N
— M.K.Stalin (@mkstalin) June 21, 2020