வெளிமாநில தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்!
வெளிமாநிலத்தில் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளர்களும் தங்களின் முகாம்களிலே தங்கியிருக்குமாறு தமிழக முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணி புரியும் வெளி மாநில தொழிலார்களை விருப்பத்தின் அடிப்படையில்,அவரவர் மாநிலங்களுக்கு ,சம்மந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் ,படிப்படியாக அனுப்பி வைக்க தமிழ்நாடு அரசு அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
“இதுவரை 8 ரயில்களில், 9 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள தொழிலாளர்களையும் ஒருவார காலத்திற்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது”.எனவே அது வரை அனைவரும் முகாமிலேயே தங்கி இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
வெளிமாநில தொழிலாளர்கள் முகாம்களிலேயே தங்கியிருக்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.@CMOTamilNadu #coronavirusinindia pic.twitter.com/dY1BU7vlmK
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 11, 2020