இவர்களுக்கான ஊக்கத்தொகையை 1000 ரூபாய் உயர்த்தி முதலமைச்சர் அறிவிப்பு!
மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி அறிவித்தார் முதல்வர்.
திருச்சி மாவட்டம் சன்னாசிபட்டியில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் பயனடையும் 1 கோடியே 1வது பயனாளியான மீனாட்சி என்பவருக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.
இதன்பின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மகத்தான சாதனை விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் பணியாற்றும் 20,000 சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை ரூ.1000 உயர்த்தி அறிவித்துள்ளார்.
இதனிடையே, வீட்டிற்கே சென்று மக்களுக்கு சிகிச்சை அளிப்பது தான் மக்களை தேடி மருத்துவம் திட்டம். இந்த திட்டம் ஓராண்டில் ஒரு கோடி நபர்களுக்கு வீடு தேடி சென்று சிகிச்சை அளித்து இருப்பது மிகப்பெரிய சாதனையாகும் கூறியிருந்தார்.