பல்கலை.க்கான அரசு மானியம் ரூ.3 கோடியாக உயர்த்தி முதல்வர் அறிவிப்பு!

MUSIC COLLEGE

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பாடகி பி.சுசீலா மற்றும் பி.எம்.சுந்தரம் ஆகிய இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் கவுரவித்தார். இதன்பின் பட்டமளிப்பு விழாவில் பேசிய முதலமைச்சர், பாடகி பி.சுசீலா, பி.எம்.சுந்தரம் இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்குவதன் மூலம் முனைவர் பட்டமே பெருமை கொள்கிறது.

இந்தியாவிலேயே இசைக்கு என உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை இந்த கல்லூரிக்கு உள்ளது. முழுக்க முழுக்க மாநில அரசு நிதியுதவி உடன் செயல்படும் பல்கலைக்கழகம் இதுவாகும். இந்த பல்கலைக்கழகத்துக்கு மாநிலத்தை ஆளும் முதலமைச்சர் தான் வேந்தராக இருக்கும் சிறப்பு உள்ளது. இப்படி முதலமைச்சர்களே வேந்தராக இருந்தால் தான் பல்கலைக்கழகம் சிறப்பாக வளர முடியும். மற்றவர்கள் கையில் இருந்தால் அதன் நோக்கம் சிதைந்துவிடும்.

பல்கலைக்கழக வேந்தர் பதவி.! ஜெயலலிதாவை மனதார பாராட்டுகிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

இந்த பல்கலை வேந்தர் முதலமைச்சர் தான் என்று 2013-ம் ஆண்டேஅப்போதைய  முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்தார்கள். இந்த முடிவை எடுத்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை மனதார பாராட்டுகிறேன். கல்வி பொதுவான பட்டியலில் இருந்து மாநில அரசின் பட்டியலுக்கு மாற்றினால்தான் அனைவருக்கும் கல்வி, எல்லோருக்கும் உயர் கல்வி என மாற்ற முடியும்.

அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சரே இருக்க வேண்டும் எனக் கூறி, அதற்கான சட்ட முன்வடிவுகளை சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளோம்.  உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரித்து வருகிறது. நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்போம் என்று கூறி, கல்வி சார்ந்த என பல்வேறு விஷயங்கள் குறித்து முதலமைச்சர் உரையாற்றினார்.

இதையடுத்து பேசிய முதல்வர், ஜெயலலிதா இசை பல்கலைக்கழக அரசு மானியம் ரூ.3 கோடியாக உயர்த்தி அடுத்த நிதியாண்டில் இருந்து வழங்கப்படும் அறிவித்தார். இதுபோன்று இசை பல்கலைக்கழத்தில் ஆராய்ச்சி மையம், நூலகம், கற்றல் மேலாண்மை அமைக்க ரூ.1 கோடி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi