கொரோனா குறித்து முதல்வர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.!

கொரோனா வைரஸால் தமிழகத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நான்காவது முறையாக மூத்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் தொடங்கி உள்ளது .
கடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் வணிக வளாகங்கள், பெரிய மால்கள், பார்கள் மற்றும் திரையரங்குகள் மூட உத்தரவிடப்பட்டது. இந்த ஆலோசனை முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்று காலை 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு முழுஆண்டு தேர்வு நடத்தாமல் நேரடி தேர்ச்சி வழங்குவது பற்றி பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை செய்து வருவதாக என தகவல்வெளியானது.
இந்நிலையில் இது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.