முதலமைச்சர் ஆலோசனை: பள்ளிகள் திறப்பது குறித்த முடிவு இன்று வெளியாக வாய்ப்பு!

Default Image

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் புதிய தளர்வுகள் அளிக்கப்படுவதா? அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழக்தில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

செப்1-ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்க அரசு உத்தேசிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதன்மை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே, தமிழகத்தில் செப்.1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து நேற்று(20ம் தேதி) முடிவு அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். ஆனால், நேற்று நடைபெற இருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்த முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஊரடங்கு அறிவிப்பின்போது, பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் திறப்பதற்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை ஏற்கனவே வெளியிட்டியிருந்தது என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்