முதல்வர் வேட்பாளரை ஜே.பி நட்டா தான் அறிவிப்பார் – அமைச்சர் பேட்டி

முதல்வர் வேட்பாளரை ஜே.பி நட்டா அறிவிப்பார் என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் ஒரு அங்கம்தான். யார் முதல்வர் வேட்பாளர் என்று முருகனோ, வானதியோ அறிவிக்க முடியாது. ஓரிரு நாட்களில் தமிழகத்திற்கு வருகை தரும் தேசிய கட்சி தலைவர் ஜே.பி நட்டா தான் அறிவிப்பார் என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் எடப்பாடி பழனிசாமி எனவும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார். தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டினால் தான் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என கூறிருந்தார். இதுபோன்று, பாஜக மாநில தலைவர் எல் முருகன், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று தெரிவித்திருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025