முதல்வர் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படும் – வானதி சீனிவாசன்
தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் எடப்பாடி பழனிசாமி. கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு அரசியலில் எதுவும் நிரந்தரமல்ல என்று வானதி பதில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகத்தான் தலைமை, அதில் மாற்றமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டினால் தான் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என கூறியுள்ளார். இதனிடையே, சமீபத்தில் பாஜக மாநில தலைவர் எல் முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று கூறியது பாஜக – அதிமுக அமைச்சர்களிடையே இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி அதிகாரபூர்வமாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்த நிலையில், தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்திருப்பது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.