முதல்வர் வேட்பாளர் சர்ச்சை அதிமுகவில் இல்லை – போரும் இல்லை வாரும் இல்லை!
அதிமுகவில் போரும் இல்லை வாரும் இல்லை என ஓ.எஸ்.மணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் அண்மைக்காலங்களாகவே முதல்வர் ,வேட்பாளர் யார் சசிகலா வெளியில் வந்தால் அவரை என்ன பதவியில் வைப்பார்கள் என சர்ச்சை கிளம்பிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் நாகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக அமைச்சர் ஓ எஸ் மணியன் அவர்களிடம், சசிகலா வருகை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கடந்த காலத்தை பற்றி யோசிக்காதீர்கள், நிகழ்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை குறித்து அதிகம் யோசிக்க வேண்டாம் அதிமுகவில் போரும் நடக்கவில்லை, வாரும் நடக்கவில்லை என பதிலளித்துள்ளார்.