அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில்,முதலமைச்சர் , துணை முதலமைச்சர் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே வெளிப்படையான மோதல் வெடித்துள்ளது.அண்மையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு நாளை (அக்டோபர் 7-ஆம் தேதி ) முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
இதனையடுத்து தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் , துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில் நாளை அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ள நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்தில் கே.பி. முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.மேலும் முதல்வர் பழனிசாமியின் இல்லத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…
பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…