பழங்குடி குடியிருப்பில் உள்ள அஸ்வினி இல்லத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், செங்கல்பட்டு, பூஞ்சேரியில் பழங்குடியினர் மக்களான நரிக்குறவர், இருளர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, 81 பழங்குடியின குடும்பங்களுக்கு வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, பயிற்சி ஆணை உள்ளிட்டவற்றை வழங்கினார்.
மேலும், ரூ.4.5 கோடி செலவில் 252 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அஸ்வினி பாசி மாலை அணிவித்து மகிழ்ந்தார். அதனை தொடர்ந்து, பழங்குடி குடியிருப்பில் உள்ள அஸ்வினி இல்லத்திற்கு முதல்வர் சென்றார்.
அப்போது அஸ்வினி முதல்வரின் காலில் விழுந்தார். முதல்வர் காலில் விழக்கூடாது என கூறினார். பின் அவர்களது குடும்ப நிலவரம் குறித்து கேட்டதறிந்தார். தனது வீட்டிற்கு முதல்வர் வந்ததால் நெகிழ்ச்சியடைந்த அஸ்வினி, தங்களது வீட்டிற்கு வந்தது மிகவும் சந்தோசம் எனக் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசைன பெருமாள் கோவிலில், தமிழக அரசின் அன்னதான திட்டம் தினந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உணவு மறுக்கப்பட்ட பழங்குடியின பெண் அஸ்வினியுடன் அமர்ந்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உணவு உட்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…