தே.மு.தி.க வேட்பாளருக்காக பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர்
- அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தே.மு.தி.க கட்சி சார்பில் வேட்பாளர் எல்.கே. சுதீஸ் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
- கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் எல்.கே. சுதீஷை ஆதரித்து முதல்வர் பிரச்சாரம் .
மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 18 -ம் தேதி தமிழகத்தில் நடக்க உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் மிக தீவிரமாக பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தே.மு.தி.க கட்சி சார்பில் வேட்பாளர் எல்.கே. சுதீஸ் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
இன்று மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஏற்காடு கருமந்துறை மலை கிராமத்தில் இருந்து தொடங்கினார் முதல்வர் பழனிசாமி.மேலும் தனக்கு ராசியான கோவிலான வெற்றி விநாயகர் ஆலயத்தில் ஆலய வழிபாடு செய்த பின் முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கினர்.
கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி தே.மு.தி.க வேட்பாளர் எல்.கே. சுதீஷை ஆதரித்து முதல்வர் பழனிசாமி பிரச்சாரம் கருமந்துறை, புத்தரக் கவுண்டன்பாளையம், வாழப்பாடி, அயோத்தியபட்டணம் உள்ளிட்ட இடங்களில் வாக்கு சேகரிக்கிறார் .