மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை தலைமை செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பணி ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்படி இந்த நிகழ்ச்சியில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை முதல்வர் வழங்கியுள்ளார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் பணியாற்றி பணிக்காலத்தில் உயிரிழந்த நபர்களின் வாரிசுகள் மூன்று நபர்களுக்கு இளநிலை உதவியாளர் பதவியும், ஒரு நபருக்கு அலுவலக உதவியாளர் பதவிக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கியுள்ளார்.
இதேபோல மற்ற மாவட்டங்களில் உள்ள பயனாளிகளுக்கு இந்த திட்டமானது தொடர்ச்சியாக அந்த பகுதியில் உள்ள ஆட்சியர் மூலமாகவும், அமைச்சர்கள் மூலமாகவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…