கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர்..!
உழவர்களின் நலன்களை எப்போதும் பாதுகாக்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் காணொளி காட்சி மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தொடங்கி வைத்தார். ரூ.227 கோடி மதிப்பில் வேளாண்துறை சார்பில், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த திட்டத்தின் மூலம் 9 லட்சம் பயன்பெறுவர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாயிங்களின் நலனுக்காக மாநில அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உழவர்களின் நலன்களை எப்போதும் பாதுகாக்கும் அரசாக திமுக அரசு திகழ்கிறது. கலைஞரின் அனைத்து இராம வளர்ச்சி திட்டம் தமிழகத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் மூலம் நகரத்தை நோக்கி கிராம மக்கள் இடம்பெயர்வது தடைப்படும் என தெரிவித்து உள்ளார்.