முதலமைச்சர் அவர்களே! சபாஷ்! 7.5 கோடி தமிழர்கள் உங்கள் பின்னால்! – பீட்டர் அல்போன்ஸ்

Default Image

தமிழக அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்ட ஊர்வலத்தில் இடம்பெறும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்து சிறுபான்மை நல ஆணையத்தின்  தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வரவேற்பு தெரிவித்து ட்வீட்.

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட ஊர்திகள் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், குடியரசு தின அணிவகுப்பில், தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து விளக்கமளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ராஜ்நாத் சிங் அவர்களின் கடிதம் குறித்து, இன்று கிடைக்கப்பெற்ற மாண்புமிகு ஒன்றியப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் கடிதத்தில், எந்தவிதக் காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லி குடியரசு தின விழாவில் அனுமதி மறுக்கப்பட்ட தமிழக அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்ட ஊர்வலத்தில் இடம்பெறும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு சிறுபான்மை நல ஆணையத்தின்  தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நமது வரலாறை நாம் சொல்லாமல் வேறு யார் சொல்வார்? முதலமைச்சர் அவர்களே! சபாஷ்! 7.5 கோடி தமிழர்கள் உங்கள் பின்னால்!’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்