இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்

முதலமைச்சர் பழனிசாமி இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய முதலமைச்சர் பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அதன்படி 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் முதலமைச்சர். இதனிடையே கடந்த 13-ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார்.ஆனால் முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் மறைந்ததை அடுத்து அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று முதலமைச்சர் பழனிசாமி இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு கொரோனா தடுப்புப் பணிகள்டீ குறித்து ஆய்வு மேற்கொள்கிறார் .புதிய நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.
29-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி செல்கிறார்.இங்கு கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.மேலும் அக்டோபர் 30 ஆம் தேதி பசும்பொன்னில் நடைபெறும் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் கலந்து கொள்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025