சென்னை அண்ணா சாலை மகளிர் காவல் நிலையத்தை பார்வையிட்ட முதல்வர்..!
முதல்வர் மு.க.ஸ்டாலின், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலை மகளிர் காவல் நிலையம் சென்று பார்வையிட்டார்.
சென்னையில் நடைபெற்ற மகளீர் தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பேரன்பிற்குரிய சிங்கப் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்கள் என வாழ்த்து தெரிவித்தார்.
மகளிர் காவல் நிலையத்தை பார்வையிட்ட முதல்வர்
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலை மகளிர் காவல் நிலையம் சென்று பார்வையிட்டார். இதனையடுத்து, முதல்வர் அவர்கள், பெண் காவலர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.