பாஜக கூட்டணியில் அதிமுக இடம்பெறுவது குறித்து முதல்வர், துணை முதல்வர் முடிவு செய்வர்…!அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பாஜக கூட்டணியில் அதிமுக இடம்பெறுவது குறித்து முதல்வர், துணை முதல்வர் முடிவு செய்வர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், புயல் பாதிப்புக்கு மத்திய அரசு ஒதுக்கிய இடைக்கால நிதி யானை பசிக்கு சோளப்பொரி போல உள்ளது. 7பேர் விடுதலையில் அரசு மவுனம் காப்பதாக பேச தெரியாமல் வைகோ பேசிவிட்டார், பின்னர் வருத்தப்படுவார். பாஜக கூட்டணியில் அதிமுக இடம்பெறுவது குறித்து முதல்வர், துணை முதல்வர் முடிவு செய்வர் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.