கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா சிலையை திறந்து வைக்கிறார் முதல்வர்.!
மெரினா கடற்கரை சாலையில் உள்ள லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் ஜெயலலிதா சிலை இன்று திறக்கப்படுகிறது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் அன்பழகன் முன்னிலையில் இன்று காலை 11 மணிக்கு ஜெயலிலதா சிலையை திறந்து வைக்கிறார் முதல்வர் பழனிச்சாமி. லேடி வில்லிங்டன் கல்லூரியில் பெயர் மாற்றப்பட்ட ஜெயலலிதா வளாகத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார். அக்கல்லுரில் உள்ள உயர்கல்விமன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா பெயர்சூட்டி திறக்கப்படவுள்ளது.
ஜெயலலிதா சிலை திறப்பில் நடிகர் அஜித் உதவியுடன் அண்ணா பல்கலைகழகம் மாணவர்கள் வடிவமைத்த ட்ரோன் ஈடுபடுத்தப்படுகிறது. சிலை மீது போர்த்தப்பட்டுள்ள பச்சை நிற போர்வையை ட்ரோன் மூலம் நீக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜெயலலிதா சிலை மீது ட்ரோன் மூலம் மலர்த்தூவ சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.