புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்துவைத்த முதலமைச்சர்..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி, சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.