விமர்சனங்களுக்கு செயலால் பதில் தருவார் உதயநிதி – முதலமைச்சர்
விளிம்பு நிலை மக்களை மேம்படுத்தும் துறைகள் உதயநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் பேச்சு.
விமர்சனத்துக்கு தனது செயல்பாடுகளால் பதில் சொல்லி அனைவரது பாராட்டையும் பெறுபவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்று திருச்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் விளிம்பு நிலை மக்களை மேம்படுத்தும் துறைகள் உதயநிதியிடம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தனக்கு ஒதுக்கப்பட்ட துறையை சிறப்பாக நடத்தி அனைவரது பாராட்டையும் பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் கூறியுள்ளார்.