Tamilnadu CM MK Stalin [File Image]
கும்மிடிப்பூண்டி திமுக முன்னாள் எம்எல்ஏ கி.வேணு அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த இரங்கல் குறிப்பில், தமிழ்நாட்டின் வட எல்லையான திருவள்ளூர் மாவட்டத்தில் கழகத்தை கட்டிக் காத்த தீரர் அருமை சகோதரர் கும்மிடிப்பூண்டி வேணு மறைந்தார் என்ற செய்தி கேட்டு துடிதுடித்துப் போனேன்.
இவர் எத்தகைய இடவரினும் எதிர்த்து நிற்கும் அஞ்சாத நெஞ்சுக்கு சொந்தக்காரர். கும்மிடிப்பூண்டி என்றாலே வேணு தான் என்று சொல்லும் அளவுக்கு அந்த தொகுதி மக்களிடம் ஒன்றுபட்ட திருவள்ளூர் மாவட்ட மக்களிடமும் அன்பு காட்டி நற்பெயர் பெற்ற அவரை இங்கு இழந்து தவிக்கிறோம்.
இவரது பிரிவால் வாடும் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கும், அவரது குடும்ப த்தினர், கோடிக்கணக்கான கழக உறுப்பினர்களுக்கும் ஆறுதல் சொல்லி என்னை நானே தேற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன். கும்மிடிப்பூண்டி வேணு நெஞ்சங்களிலும், வாழ்வார் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ வேணு உடலுக்கு மலர்வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…