இன்று திருச்சி மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ளும் முதல்வர்..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று திருச்சி மாவட்டத்திற்கு செல்ல உள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். பல்வேறு துறைகளில் ஏற்கனவே முடிவுற்ற 203 திட்டங்களை திறந்து வைக்கிறார். மேலும், புதிதாக 532 பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 327 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு துறைகளின் கீழ் சுமார் 40,344 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த நிகழ்வில் செயல்படுத்தப்படவுள்ள நலத்திட்ட உதவிகளின் மொத்த மதிப்பீடு ரூ.1084.80 கோடி ஆகும்