திருவாரூர், தஞ்சை மாவட்டத்திற்கு இன்று முதல்வர் பயணம்.!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில், இன்று திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டத்திற்கு சென்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார். நேற்று கடலூர் மற்றும் நாகை மாவட்டத்திற்கு சென்று கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு நடத்தி விட்டு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து, பல நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.