டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 385 பேரில், 5 பேருக்கு மட்டும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கவுள்ளார்.
டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” வழங்கி தமிழ்நாடு அரசு கௌரவித்து வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு சிறந்த முறையில் பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் பணிபுரியும் 385 ஆசிரியர்கள் ” டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 385 பேரில், 5 பேருக்கு மட்டும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கவுள்ளார். எஞ்சிய 380 பேருக்கும், அவரவர் சார்ந்த மாவட்டங்களில் நாளை மறுநாள் ஆசிரியர் தினத்தன்று விருது வழங்கப்பட உள்ளது. தேர்வான அனைவருக்கும் விருதுடன் ரூ.10,000 காசோலை, வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…
மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…
சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…
ஆப்கானிஸ்தான் : நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற விரும்புவதாக ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது…