இன்று நாமக்கல்லில் புதிய மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டவுள்ள முதலமைச்சர் ..!

தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய அரசு தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைஅமைக்க ஒப்புதல் வழங்கியது.
இதையெடுத்து முதற்கட்டமாக ராமநாதபுரம் ,விருதுநகரில் கடந்த வாரம் புதிய மருத்துவ கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று இரண்டாம் கட்டமாக கிருஷ்ணகிரியில் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இன்று நாமக்கல்லில் புதிதாக அமையவுள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் அடிக்கல் நாட்டவுள்ளார்.