மே 25ல் இளைஞர் திறன் திருவிழாவை துவக்கி வைக்கும் முதலமைச்சர்!
சென்னையில் மே 25-ஆம் தேதி இளைஞர் திறன் திருவிழாவை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். அதிக வேலைவாய்ப்பு உள்ள தொழில்களை இளைஞர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இளைஞர் திறன் திருவிழா நடத்தப்படுகிறது. திறன் மேம்பாடு குறித்து விழிப்புணர்வு மற்றும் தகவல்களை பெற உதவும் வகையிலும் திருவிழா நடத்தப்படுகிறது என தகவல் தெரிவிக்கப்படுகிறது. சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெறும் விழாவில் அமைச்சர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.