தூத்துக்குடியில் மழை பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் நாளை ஆய்வு..!
நாளை தூத்துக்குடி மாவட்ட மழை, வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் தூத்துக்குடிக்கு வருகிறார்.
வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழ்நாடு முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதலமைச்சர் நேரில் சென்று சீரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.
இதற்கிடையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 25-ஆம் தேதி பெய்த கனமழையில் பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி, திருச்செந்தூர், காயல்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெருதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் நாளை தூத்துக்குடி மாவட்ட மழை, வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக பிற்பகல் 1 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் வெள்ள சேதங்களை பார்வையிட உள்ளார்.