தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெப்பம்…எதிர்கொள்ள முதல்வர் ஸ்டாலின் அறிக்கை.!

Chief minister MK Stalin

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக இயல்பு நிலையை விட அதிகளவில் வெப்பம் வாட்டி வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையமும் வெளியிட்ட வானிலை அறிக்கையின் படி, வெப்பம் தமிழ்நாட்டில் இயல்புநிலையை விட 2 (அ) 3 டிகிரி அதிகமாக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 2 தினங்களுக்கும் வெப்பம் இதைவிட அதிகமாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து தற்காத்துக்கொள்ளவும், செய்யவேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அவசியம் குறித்தும் அறிவுரைகள் வழங்கும் விதமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் முக்கியமாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் குடிநீர், நிழற்கூட வசதி, அவசர மருத்துவ வசதி போன்றவை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திறந்த வெளிகளில் வேலை செய்யும் பணியாளர்கள் காலை சீக்கிரம் பணியை தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரிப்பதற்குள் வேலையை முடிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்