அனைவரும் தமிழ் மொழி கற்க வேண்டும்.! – பிரதமர் இருக்கும் மேடையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.!

Default Image

அனைவரும் தென்னிந்திய மொழியை கற்க வேண்டும். அது தமிழாக இருக்க வேண்டும் என கூறியவர் காந்தியடிகள். – மேடையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு.

திண்டுக்கல், காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின், ஆளுநர் ரவி மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘ காந்தியடிகளுக்கும், தமிழகத்துக்குமான தொடர்பு மிக பெரியது. தமிழகத்திற்கு காந்தியடிகள் 26 முறை வருகை புரிந்துள்ளார். தமிழை விரும்பி படித்து, தமிழில் கையெழுத்திட்டவர் காந்தியடிகள்.’  என தமிழைப்பற்றி பெற்றுமையாக பேசினார்.

மேலும், ‘ அனைவரும் தென்னிந்திய மொழியை கற்க வேண்டும். அது தமிழாக இருக்க வேண்டும் என கூறியவர் காந்தியடிகள்.’ என குறிப்பிட்டார்.

அடுத்ததாக, ‘ இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. காந்தியடிகளின் சிஷ்யரான ஜி.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியால் இந்த பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் கட்ட நிலம் வழங்கிய சின்னாளப்பட்டி மக்களை நினைவு கூறவேண்டும். இந்தியாவில் கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. என குறிப்பிட்டார்.

மேலும், ‘ பெண்கல்வியை ஊக்குவிக்க புதுமைப்பெண் திட்டம், உயர்கல்வியில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு, அனைவரும் கல்வி பெற இல்லம் தேடி கல்வி . என கல்விக்கான திட்டங்கள் மாநில அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கல்வி மட்டுமே நமது ஒரே சொத்து. எனவும் முதல்வர் உரையாற்றினார்.

இறுதியாக, ‘ சமூகத்திற்கு சேவை செய்வதே கல்வியின் இலக்கு என காந்தி கூறியுள்ளார் அதன் படி செயல்படுவீர்கள் என நம்புகிறோம். இளையராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தது பெருமையாக உள்ளது.’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்