ஸ்பெயின் நாட்டில் தமிழர்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் உரை!
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருவதுடன், பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து, “ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்” எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது முதல்வர் கூறியதாவது, தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று எனக்கு இப்போது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டுக்கு நான் வருவது இதுவே முதல் முறை.
ஆனால், ஸ்பெயின் நாட்டுக்கு பலமுறை வந்தது போல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பலமுறை வந்ததைப் போன்ற உணர்வைத் தரும் வரவேற்பை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கடல் கடந்து வெளிநாட்டில் வாழும் தமிழர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் பிறந்த உங்களுடைய தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து கொண்டிருக்கிறீர்கள்.
நாடாளுமன்ற தேர்தல் – 38 குழுக்களை அமைத்தது தமிழ்நாடு பாஜக!
செய்யப் போகிறீர்கள்; செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். கலைஞர் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாரோ அதை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம். வெளிநாட்டில் உள்ள தமிழர்களை சென்னைக்கு வரவழைத்து கலந்து பேசினோம். அவர்களின் பிரச்சனையை தீர்த்து வைத்துள்ளோம்.
அயல்நாட்டில் இருக்க கூடியவர்களுக்காக துணை நிற்க வேண்டும் என்பதற்காக கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது இரு அமைப்பை உருவாக்கினார். சில நாட்களில் ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டதால் அது செயல்படாமல் போய்விட்டது. தமிழர்களின் பாசம், நேசம் அன்பு கொண்ட உபசரிப்பு என்னை நெகிழ வைத்திருக்கிறது என்றுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், “ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்” எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே உரையாற்றினார்.#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @TRBRajaa@DineshKPatnaik pic.twitter.com/ZMgDvJaRNw
— TN DIPR (@TNDIPRNEWS) February 5, 2024