தீரன் சின்னமலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையோடு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217-வது நினைவு தினத்தையொட்டி இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், ஈரோடு மாவட்டம் ஓடாநிலை என்ற இடத்தில், தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.