குடியரசுத் தலைவருடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு!

MK Stalin anad Droupadi Murmu

கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு அழைப்பு விடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றுளார். டெல்லி சென்ற முதலமைச்சருக்கு எம்.பி.க்கள் ஜெகத்ரக்‌ஷகன், பழனிமாணிக்கம், ராஜேஷ்குமார், எம்.எம்.அப்துல்லா, உள்ளிட்டோர் விமான நிலையத்தில் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார். சென்னை கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார் முதலமைச்சர். கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் 1,000 படுக்கைகளுடன் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனை ஜூன் 3-ஆம் தேதி திறக்கப்படுகிறது. இதனையே திறந்து வைக்க இன்று டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் முறையாக குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்