மீனவர் பிரச்னை: “நிரந்தர தீர்வு வேண்டும்” – முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்.!

இந்த நீடித்த பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தான் ஏற்கனவே வலியுறுத்தியபடி கூட்டுப் பணிக்குழுக் கூட்டத்தினைக் கூட்டுவதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்.

stalin - fisheries tn

சென்னை : ராமேஸ்வரத்தை சேர்ந்த மேலும் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று நடுக்கடலில் கைது செய்துள்ளனர். இலங்கை கடல் எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறி 3 விசைப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 10 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த 9ஆம் தேதி எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தை சேர்ந்த 14 பேரை கைது செய்திருந்தது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில், இலங்கை கடற்படையால் 10 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவித்திட உடனடியாக தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார். இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டு பணிக்குழுக் கூட்டத்தை கூட்டவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 திமுக நோட்டீஸ்

மீனவர் பிரச்னை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த 7ம் தேதி நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் அளித்துள்ளார். அதில், “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாகவும், இவ்விவகாரத்திற்கு தீர்வு காண வேண்டும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்னறும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்