வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்ட்ரல் அருகே கண்ணப்பர் திடலில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமை நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து வால்டக்ஸ் சாலை, கொளத்தூர் நிவாரண முகாம்களிலும் முதல்வர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், உணவுகளை வழங்கினார்.
இதன்பின், சென்னையில் வெள்ளம் சீரமைப்பு பணிக்கு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், வரலாறு காணாத வெள்ளத்தை சந்தத்தபோதும் கடந்த காலத்தை ஒப்பிடும்போது பாதிப்பு குறைவாக உள்ளது. 2015ம் ஒப்பிடும்போது தற்போது ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்டுள்ள மழையின் அளவு அதிகம்.
ஓய்ந்தது மழை… வடியும் தண்ணீர் – மின்சாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு முக்கிய தகவல்!
சென்னையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும், தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 199 பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது அதைவிட அதிகமான மழை பெய்தும் 9 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்க் கூடாது. இதற்காக மிகவும் வருந்துகிறேன்.
ரூ.4,000 கோடி மதிப்பில் ஏற்படுத்திய மழைநீர் வடிகால் பணிகள் காரணமாகத்தான் இந்த வரலாறு காணாத மழையும் பாதிப்புகள் குறைவாக உள்ளது. முன்பு பெய்த மழையின் அடிப்படையில் பணிகளை திட்டமிட்டோம். மிகப்பெரிய வெள்ளம் ஏற்பட்டாலும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாதிப்புகள் குறைந்துள்ளது.
மிக்ஜாம் புயல் : இன்று மாலைக்குள் முக்கால்வாசி மீட்பு பணிகள் நிறைவுபெரும்.! அமைச்சர் KKSSRR பேட்டி.!
சென்னையில் இயல்பு நிலையை வெகு விரைவில் கொண்டுவர தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புயலின் சீற்றத்தால் அடையாறு, கூவம் ஆற்று நீர் கடலில் கலப்பது மெதுவாக இருந்தது. மிக கனமழை பெய்தபோதிலும் உடனுக்குடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மழையை பொருட்படுத்தாமல் நேற்றே மீட்பு, நிவாரண பணிகள் தொடங்கப்பட்டன. எனவே, வரலாறு காணாத அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மிக்ஜாம்’ புயல் மீட்பு பணிகளுக்காக ரூ.5,000 கோடி நிவாரண நிதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளோம் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…