ஜப்பான் வர்த்தக அமைப்புடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடுகளை செய்திட வேண்டும் என முதல்வர் அழைப்பு.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், அடுத்தாண்டு நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காவும் 9 நாள் அரசுமுறை பயணமாக சிங்கப்பூரை தொடர்ந்து ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின், பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, அந்நாட்டு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், டோக்கியோவில் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். வர்த்தக அமைப்பு தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ, செயல்துணை தலைவர் சுசுயா நகஜோவுடன் ஆலோசனை மேற்கொண்டார். ஜெட்ரோ அமைப்பு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அளிக்கும் ஆதரவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி கூறினார்.
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடுகளை செய்திட வேண்டும் அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பில் தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தியா – ஜப்பானிய கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்திட வேண்டும் எனவும் முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். தொழில்நுட்ப பகுதிகள், மேம்பட்ட உற்பத்திக்கான மையத்தை தமிழகத்தில் அமைத்திட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.