தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு!

mk stalin

புயல் மற்றும் மழை பாதிப்பு மீட்பு பணியில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, அதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை ஆகிய துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொது மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மீட்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தன்னார்வலர்களும், பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்காக உதவி மையம் (HELP DESK) சென்னை எழிலகத்தில் உள்ள மாநிலப் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள விருப்பமுள்ள தனிநபர்கள் மற்றும் தன்னார்வலக் குழுக்கள், அமைப்புகள் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை தமிழ்நாடு அரசின் “வாட்ஸ்அப்” எண்களில் தொடர்புகொண்டு பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 9791149789, 9445461712, 9894540669 ஆகிய வாட்ஸ் அப் எண்கள் மூலமாகவும், 73977 66651 ஆகிய பொதுவான எண்ணையும் தொடர்புகொண்டு பதிவு செய்யலாம். நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள பதிவு செய்து கொள்ளும் தனிநபர்கள் / தன்னார்வலர்கள், மீட்புப் பணிகள் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
CSK vs RCB RCB
bumrah MI
Sardar2
Nitish Kumar woman at event sparks row
tamilisai soundararajan about tvk vijay
virender sehwag ms dhoni