முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக நாளை திருவாரூரில் உள்ள முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி இல்லத்திற்கு செல்கிறார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக வெற்றி பெற்று,தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் கடந்த மே மாதம் 7 ஆம் தேதியன்று ஆட்சிப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில்,மறைந்த முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்கள் பிறந்த ஊரான திருவாரூருக்கு, முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை செல்கிறார்.ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக முதல்வர் அங்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி,நாளை மதியம் சாலை வழியாக திருவாரூர் சென்று,மறைந்த கருணாநிதி அவர்களின் இல்லத்தில் மரியாதை செலுத்தவுள்ளார்.அதனைத் தொடர்ந்து,காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்திற்கு சென்று முதல்வர் மரியாதை செலுத்துகிறார்.
பின்னர்,பயணத்தை முடித்து விட்டு நாளை மறுநாள் சென்னை திரும்ப முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டர்பன் : இந்திய அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த டி20 தொடரில் 4…
ஒட்டாவா : கனடாவில் இந்திய தூதரகங்கள் ஏற்பாடு செய்திருந்த தூதரக சேவை முகாம்களுக்கு, கனடா பாதுகாப்பு அதிகாரிகள் அதாவது அந்நாட்டு…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
நீலகிரி : கடந்த 3ம் தேதி பெய்த மழையால் மலை ரயில் பாதையின் பல இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டன,…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி அடுத்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…