#Breaking:கலைஞரின் 98 வது பிறந்தநாள்: 5 நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்…!
கலைஞரின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு 5 நலத்திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.
மறைந்த திமுக தலைவரும்,முன்னாள் முதலமைச்சருமான கலைஞரின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு,காலை, 9 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி அவர்களின் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார்.இதனையடுத்து, பல்வேறு திட்டப் பணிகளை,முதல்வர் ஸ்டாலின், இன்று(ஜூன் 3) துவக்கி வைக்க உள்ளார்.அதன்படி,
- தலைமைச் செயலகத்தில்,காலை, 10:30 மணியளவில் ரேஷன் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு,கொரோனா நிவாரணத் தொகையின், இரண்டாவது தவணை,ரூ.2,000 வழங்கும் திட்டம்.
- 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம்.
- இந்து சமய அறநிலையத் துறை சார்பில்,கோவில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு, 4,000 ரூபாய் உதவித்தொகை மற்றும் 10 கிலோ அரிசி,13 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம்.
- கொரோனாவால் இறந்த, பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய்; மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள், காவலர், நீதிபதிகள் குடும்பத்துக்கு, 25 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் திட்டம்.
- ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்ட பயனாளிகள், 10 பேருக்கு, அரசு பயன்கள் வழங்கும் திட்டம் போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.