மதுரையில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்… ஜனவரி 23ல் திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்!

jallikattu stadium

தமிழர்களின் வீர விளையாட்டும், தனிச்சிறப்பு மிக்க மரபு அடையாளமாக ஜல்லிக்கட்டு திகழ்கிறது. இந்த சூழலில், மதுரை அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு அரங்கம் அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார்.

அதன், அடிப்படையில், மதுரையில் பிரமாண்டமாக ரூ.44 கோடியில் சுமார் 67 ஏக்கர் பரப்பளவில் ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகிறது. இந்த அரங்கத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து விளையாட்டை ரசிக்கும் வகையில் அரை வட்ட வடிவில் கட்டப்பட்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும், இந்த அரங்கத்தில் செய்யப்பட்டுள்ளன. இங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்க்க வரும் மக்கள் எளிதில் வந்து செல்ல வசதியாக நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், இந்தாண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கி உள்ளது. இதனால், தைப்பொங்கலை ஒட்டி, விரைவில் மதுரை ஜல்லிக்கட்டு அரங்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், மதுரையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை ஜனவரி 23ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்கிறார் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார். இதனிடையே, அலங்காநல்லூரில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டு வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்தக்கால் இன்று நடப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்