சென்னை:21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஜனவரி 4 ஆம் தேதி(நாளை) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு முன்னதாக அறிவித்திருந்தது.அதன்படி,பொங்கல் தொகுப்பை 2 கோடியே 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் வழங்க அரசு உத்தரவிட்டது.
இதனையடுத்து,பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரொக்கத்தொகை ஆகியவை நியாயவிலை கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.ஆனால்,அதன்பின்னர் மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றியிருந்த ரொக்கத் தொகை என்ற வார்த்தையை நீக்கம் செய்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
அதே சமயம்,பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டது.அதன்படி, தெருவாரியாக சுழற்சி முறையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விற்பனை முனைய இயந்திரத்தின் (POS) மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கும் திட்டத்தை நாளை (ஜனவரி 4 ஆம் தேதி) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.அதன்படி,சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து நாளை காலை 10.30 மணிக்கு இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.இதன்மூலம்,அனைத்து ரேசன் கடைகளிலும் நாளை முதல் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்படவுள்ளது.
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…