#Breaking:தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்? – முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை!
சென்னை:தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ளதன் காரணமாகவும்,மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையிலும் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்ட உயர் மருத்துவ அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளது.
முன்னதாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை முதல்வர் அறிவித்திருந்தார்.அந்த வகையில்,இரவு நேர ஊரடங்கு மற்றும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.இந்த நிலையில்,நாளை காலையுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில்,தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகளுடன் நாளை முதல்வர் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,981 ஆக இருந்த நிலையில்,அந்த எண்ணிக்கை நேற்று 2 ஆயிரம் அதிகரித்து 10,978 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.