வடசென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிடுகிறார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.இதனையடுத்து,சென்னையில் கோயம்பேடு, எழும்பூர், அண்ணா நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் நீர் தேங்கி உள்ளது.இதனால்,சென்னையில் உள்ள பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக,வடசென்னை மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 40 டிரான்ஸ்பார்மர்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.எனினும், மழைநீர் வடிந்தவுடன் மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
இந்நிலையில்,விடிய விடிய பெய்த மழையால் வடசென்னை பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிடுகிறார்.
வட சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதித்திருக்கும் நிலையில்,இன்று காலை 11 மணியளவில் மழை சேதங்களை நேரில் சென்று முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும், சாய்ரா பானுவும் 29 வருட 29 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக நவம்பர்…
மும்பை : அதானி குழுமம் மீது முன்னர் அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றசாட்டை முன்வைத்தது அப்போது அந்த அறிக்கை…
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மானும் மனைவி சாய்ரா பானுவும் திருமணமாகி 29 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், இருவரும்…