தடுப்பூசி தயாரிக்கும் HLL நிறுவனத்தை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்..!
செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் HLL நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையானது மிகவும் தீவிரமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,கடந்த வாரத்தில் கோவை,திருச்சி,மதுரை உள்ளிட்ட சில பகுதிகளுக்கு சென்று கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.
அந்த வகையில்,இன்று செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் HLL நிறுவனத்தை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
மேலும்,இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,”செங்கல்பட்டு HLL நிறுவனத்தின் தடுப்பூசி தயாரிக்கும் ஆய்வகத்தை நேரில் ஆய்வு செய்து உடனடியாகத் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கிடும் முயற்சிகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டேன்.மேலும், தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும்.அதற்கு மத்திய அரசும் நிதி ஒதுக்கீடு செய்து உதவிட வேண்டும்”,என்று தெரிவித்திருந்தார்.
செங்கல்பட்டு #HLLbiotech நிறுவனத்தின் #Vaccine ஆய்வகத்தை நேரில் ஆய்வு செய்து உடனடியாகத் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கிடும் முயற்சிகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டேன்.
தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும்.
மத்திய அரசும் நிதி ஒதுக்கீடு செய்து உதவிட வேண்டும்.@PMOIndia pic.twitter.com/1RHZoHHf1d
— M.K.Stalin (@mkstalin) May 25, 2021