#BREAKING: ஆன்லைன் ரம்மி தடை..சிறப்பு சட்ட குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவு!

Default Image

ஆன்லைன் ரம்மியை தடை செய்தவற்கு சிறப்பு சட்ட குழுவை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு.

ஆன்லைன் ரம்மியால் பலரும் பணம் இழந்து தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்தவற்கு அவசர சட்டத்தை உருவாக்க சிறப்பு சட்ட குழுவை அமைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதல்வர் ஆணையிட்டுள்ளார். மேலும், இந்த குழுவில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனர் லட்சுமி விஜயகுமார் இடம்பெற்றுள்ளனர்.

தமிழக அரசின் குழுவில் காவல்துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடேவும் இடம்பெற்றுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து உரிய தரவுகளுடன் இந்த குழு ஆய்வு செய்யும் என்று கூறியுள்ளார். சிறப்பு குழு இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரை அளிக்கவேண்டும் என்றும் இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் ஆன்லைன் ரம்மிக்கு அவசர சட்ட விரைவில் இயற்றப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், புதிய சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையில் முன்மாதிரியாக அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்