#BREAKING: “நம்ம ஸ்கூல்” திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கான பிரத்யேக இணையதளத்தையும் சென்னையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர். இந்த திட்டம் மூலம் முன்னாள் மாணவர்கள், தனியார் நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த முடியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிஎஸ்ஆர் நிதியில் பள்ளிகளின் கட்டமைப்பு, ஆய்வகங்கள் மற்றும் நூலகங்கள் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் முடியும் என்றும் கூறப்படுகிறது. நம்ம ஸ்கூல் எனும் புதிய திட்டத்தில் பங்கெடுப்பவர்கள் இணையதளம் மூலம் விரும்பும் பள்ளிகளுக்கு நிதியுதவி வழங்கலாம் என அரசு தகவல் தெரிவித்துள்ளது.