கொளத்தூரில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார் முதல்வர் ஸ்டாலின்.!
கொளத்தூரில் இன்று முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில், திறந்தவெளி மைதானம், சிறுவர் பூங்கா போன்றவற்றிற்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கிவைத்துள்ளார்.
மேலும் முடிவுற்ற பல பணிகளை இன்று முதல்வர் ஸ்டாலின் செயல்பாட்டிற்கு தொடங்கிவைத்தார். மழைவெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க சென்னை கொளத்தூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள் எந்த நிலையில் இருக்கின்றன என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.